முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு கூ..... போட்ட காலி மக்கள்

ஹிந்த ராஜபக்ஷ, காலியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் ஹூவென சத்தமிட்டுள்ளனர்.

வைபவத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரச ஊடகங்கள் தனக்கு எதிராக சேறுபூசுவதாகவும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி இப்படி கூறியதும் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் பின் இருக்கையில் இருந்தவர்கள் ஹூவென சத்தமிட்டுள்ளனர்.
இதனால், தனது உரையை கொஞ்ச நேரம் நிறுத்திய மகிந்த மீண்டும் ஆரம்பித்தார். மீண்டும் தனக்கு எதிராக சேறுபூசப்படுவதாக கூறிய கதையையே அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் வந்திருந்த பலர் மீண்டும் ஹூவென சத்தமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் எந்த ஊடகங்களுக்கும் செல்லாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி வைபவத்தை ஒழுங்கு செய்தவர்களிடமும் பாடசாலை அதிபரிடம் கேட்டுக்கொண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -