அபூ மனீஹா-
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டமைக்கிணங்க, புதிய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை வியாளக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலையில், பெரும்போக நெல்லினைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நஸாரி அபேசேகர, அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதேவேளை அன்றய தினம் மாலை இரண்டாவது நிகழ்வாக இடம்பெற்ற நெல் கொள்வனவு நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது - கீரி சம்பா மற்றும் சம்பா இன நெல் வகைகள் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் நாடு இன நெல் 45 ரூபாவுக்கும் கொள்ளவனவு செய்யப்பட்ன.
.jpg)
.jpg)
.jpg)