உல­கக்­கிண்ண பயிற்­சிப் போட்டியில் 5 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

லங்கை-தென்னாபிரிக்க அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்­றி­பெற்­றுள்­ளது.

11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை பெற்று வரு­கின்­றன. 

அந்­தவகையில் இன்று நியுசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடை பெற்ற பயிற்சிப் போட்­டி யில் இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதி­ன.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

அதன் படி களமிறங்கிய இலங்கை அணி டில்சான் பெற்ற சதத்தின் உதவியுடன் 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் 44.4 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட, தென்னாபிரிக்க அணிக்கு 30 ஓவர்களில் 224 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆட்டம் இலங்கையின் பக்கம் இருந்தாலும் மீண்டும் மழை குறுக்கிட, 25 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட தென்னாபிரிக்க அணி 24.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -