பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-சல்மா ஹம்சா

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா ஹம்சா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை(27.1.2015) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற வைபவமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க கமாரதுங்கவை சந்தித்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதுடன் பெண்களின் உரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை விடயத்திலும் கூடிய கவனம் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டதாக சல்மா ஹம்சா குறிப்பிட்டார்.

இதன் போது அமைச்சர் றோசிசேனநாயக்காவை சந்தித்து மட்டக்களப்புக்கு வருகை தருமாறும் வேண்டுகோள் விடுத்ததாக சல்மா மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -