மதுரையில் நடைபெற்ற இந்து இளைஞர் சேனா அங்குரார்பண நிகழ்வில் சீனித்தம்பி யோகேஸ்வரன்!

 
த.நவோஜ்-
ந்தியா தமிழ் நாட்டின் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து இளைஞர் சேனா அங்குரார்பண நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.

மதுரை அச்சையா ஹோட்டலில் இவ்வமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன், பொதுச் செயலாளர் சோலைக் கண்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட நிகழ்வில் ஆரம்பமாக அன்றைய தினம் நேத்தாஜு சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் என்பதால் திருவுருவச் சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மலர் மாலை சூட்டினார். தொடர்ந்து தமிழக மாநில இந்து இளைஞர் சேனை மகாநாடு நடைபெற்றது.

மகாநாடு முடிவடைந்த பின் சனிக்கிழமை அன்று சில முக்கிய விடயமாக தேனீ மாவட்டத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தேனீ மாவட்டத்தில் உள்ள தேனீ மேலப்பட்டை இந்து நாடார் சரஸ்வதி மேல் நிலைப் பள்ளியின் வருடாந்த விழாவுக்கு வருகை தந்த இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனை மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து உரையாடினார்.

இந்திய மத்திய இணையமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் நீண்டகால தொடர்பு கொண்டவர்கள். இவ்வகையில் இலங்கையில் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் தமிழ் மக்கள் சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும், கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலை குறித்தும் இருவரும் முக்கியமாக உரையாடியுள்ளர்.

13வது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்தச் செய்வதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இலங்கையில் தமிழ் மக்கள் சம அந்தஸ்துடன் வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என தற்போதை ஜனாதிபதியையும், விசேடமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் தான் எடுத்துக் கூறியதாகவும் அமைச்சர் பாராமளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்தார்.

அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் விடுத்த வேண்டுகோளில் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பாடசாலை விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார். அதன் பின் இலங்கை நிலவரம் குறித்து அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் ஊடாகவியலாளருக்கும் கருத்து தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -