எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிவது குறித்து பொதுபல சேனா அமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்பிடம் இருந்து தமது அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் பற்றி முழுமையான ஆராய்ந்து சிங்கள பௌத்த மக்களுக்காக சரியான தீர்மானம் ஒன்றை தமது அமைப்பு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது எதிர்க்கட்சியின் பணியை பொதுபல சேனாவே மேற்கொண்டது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
