அமைச்சர் உதுமாலெப்பை, அமைச்சர் ரிஷாதின் கட்சியில் இணைகிறார்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

முன்னாள் அமைச்சர் ஏ.எல். அதாவுல்லாஹ் எம்.பியின் தேசிய காங்கிரஸை சேர்ந்தவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான எஸ். எம். உதுமாலெவ்வை அந்தக் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலையடுத்து தேசிய காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவைக் கருத்தில் கொண்டே அவர் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அவர் இணையக் கூடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் நாளை சனிக்கிழமை (31) அட்டாளைச்சேனை நடைபெறவிருக்கும் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -