முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அமைச்சினை முடுவதற்கு தீர்மாணம்!

அஸ்ரப். ஏ. சமத்-

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அமைச்சான பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் 16,700 பட்டதாரிகள் நிரந்தரமாக்கப்பட்டு மாதாந்தம்  அரச சம்பளம் ருபா 28,000 பெருகின்றனர். 

அவர்கள் நாளாந்தம் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டு விட்டு மீண்டும் 04.30 மணிக்கு கையெழுத்திட்டு வீடு செல்லும்வரை அலுவலகங்களில் கதைப்புத்தகங்கள் நாவல்கள் வாசிக்கின்றனர்.  

இவர்கள் இந்த அமைச்சின் கீழ் செய்வதற்கு எவ்வித வேலையும் இல்லை. என திட்டமிடல் பெருளாதார அமைச்சர் கலாநிதி ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.

இவ் பட்டதாரிகள் சமுர்த்தி வீடமைப்பு அமைச்சின் கீழ் தான் கொண்டு வருதல் வேண்டும் அல்லது பொதுநிருவாக அமைச்சின் ஊடாக வேறு அமைச்சுக்களுக்கு மாற்றுதல் வேண்டும்.  

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அமைச்சினை முடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டு பிரதமந்திரி அழுலவலகத்திலே இந்த அமைச்சு இயங்குகின்றது. 

ஆனால் மருதாணையில் உள்ள அமைச்சினை முட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைச்சின் கீழ் இவ்வளவு பாரியதொகையில் 16,700 ஊழியர்கள் ஒர்  அமைச்சுக்கு தேவைப்பாடாது. ஏற்கனவே 80 அமைச்சுக்கள் 30ஆக குறைக்ப்பட்டதனால்  ஏனைய 50 அமைச்சுக்களின் ஊழியர்களும் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 1இலட்சம் ஊழியர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு  அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களில்  நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -