சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைநலன் பாராட்டு விழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.உசைனா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, எம்.எம்.எம்.முபாறக், ஏ.எம்.எம்.றியாத், சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹம்சா, கல்முனை பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் என்.எம்.சியாத், சாய்ந்தமருது மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹில்மி உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு தமிழ், சிங்கள புத்தாண்டு சேமிப்பு வாரத்திலும், புகைத்தல் எதிர்ப்பு கொடி தினத்திலும் கூடுதல் நிதிகளை சேகரித்த உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் திவிநெகும வேலைத்திட்டத்தினை சிறப்பான முறையில் அமுல்படுத்தி; மக்களுக்கு சேவையாற்றிய முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் சான்றிதழ் வழங்கி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளராக இருந்து மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற ஐ.அலியார் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச ஆகியோரின் சேவைகளுக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவராக இரண்டு ஆண்டுகள் மிகச் சிறப்பாக கடமையாற்றிய சாய்ந்தமருது 17ம் பிரிவைச் சேர்ந்த எம்.ஏ.றசீட் அவர்களின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.