ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கல்குடாவின் அரசியல் முகவரியை தந்ததில் பெறும் பங்கு வகித்த முன்னால் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதரின் ஞாபகர்த்தமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியினால் சபையில் ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் வீதிக்கு அன்னாருடைய பெயரை சூட்டும் முகமாக எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு (30.01.2015) குறித்த வீதிக்கான பெயர் பலகை நடும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரனியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் இதற்கான பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட உள்ளது. ஆகையால் இந் நிகழ்வுக்கு மொஹைதீன் அப்துல் காதரை ஞாபகப்படுத்தும் முகமாகவும் அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற வேண்டி இடம் பெறவுள்ள துவா பிரார்த்தனையிலும் பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றார் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி.
.jpg)
.jpg)