பி.எம்.எம்.ஏ.காதர்-
கொரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் உள்ளுராட்சி மன்றங்களில் ஆசியா மன்றம் முன்னெடுத்து வரும்; வேலைத் திட்டம் தொடர்பில் கல்முனை மாநகரசபையில் அமைக்கப்பட்டு வரும் ஐக்;கிய சதுக்கம் மற்றும் வாகனத் தரிப்பிடம் தொடர்பான முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கலந்துரையாடல் அண்மையில் கல்முனை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் நெறிப்படுத்தலில் கொரிய ஆய்வு நிறுவனத்தின் சர்வதேச ஆலோசகர் பேராசிரியர் யங்கூன் ஆண், கொரிய கலாசார நிறுவனத்தின் ஆலோசகர் கலாநிதி இம்டோக் கீ. கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மற்றும் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எல்.எம்.மாஹிர், பொரியிலாளர் ஏ.எம்.பஸீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஒரு தொகுதி மழைக்கால மேலங்கியும் ஆசியா மன்றத்தால் மாநகர சபைக்கு வழங்கப்பட்டது. இத்தடன் கொரிய நாட்டின் பிரதிநிதிகள் குறித்த வேலைத் திட்டங்களையும் பார்வையிட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment