ஹுனைஸ் பாரூக் எம்.பி தொடர்பில் அண்மைக்காலமாக வெளிவரும் அபாண்டங்களுக்கு கண்டனம்

முசலி இளைஞர் சம்மேளன ஊடகப்பிரிவு-

ஹுனைஸ் எம்.பிக்கு எதிராக கண்டன தீர்மானம்! முசலிப் பிரதேச சபையில் பிரேரணை. எனும் தலைப்பிடப்பட்டு பல இணைய தளங்களில் வெளியான செய்திக்கு முசலி இளைஞர் சம்மேளனம் மிகவும் வன்மையான கண்டணத்தைத் தெரிவிக்கின்றது.

அமைச்சர் றிசாத் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் ஆகியோர் மீது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் எம்.பி அன்மையில் கலந்து கொண்ட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கருத்து வெளியிட்டிருப்பதாக வெளியாகியுள்ள இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். 

அவர் அன்மையில் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியானது 2014.11.30ம் திகதி சக்தி டீ.வி யின் மின்னல் நிகழ்ச்சியேயாகும் இதில் அமைச்சர் றிசாட் பற்றிய தவறான எந்த ஒரு வார்த்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பேசவில்லை இருப்பினும் சில ஊடகங்களில் ஹுனைஸ் பாரூக் எம்.பிக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்களை இவர்களே சுமத்திவிட்டு அதனை மறைப்பதற்கு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்அறிக்கை இடுகின்றார்கள். 

இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை போன்று கட்சியையோ, கட்சி தலைவரையோ, மற்றும் பிரதேச சபைத் தலைவர் தொடர்பிலோ வேன்டுமென்று எந்த ஒரு அபாண்டத்தையும் சுமத்தவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :