த.நவோஜ்-
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய சக்தி முன்பள்ளியின் 28ம் ஆண்டு கலை விழா புதுக்குடியிருப்பு கலைவாணி வித்தியாலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா கல்வி வலய ஆரம்பப் பிள்ளைப் பருவ இணைப்பாளர் க.நிதிகரன், புதுக்குடியிருப்பு கலைவாணி வித்தியாலய அதிபர் சி.முருகவேள், புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ், புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மு.கோணேஸ், நாசிவந்தீவு பால் பாடசாலை ஆசிரியர் திருமதி.எஸ்.பொண்மணி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனம், கிராமிய நடனம், சிறுவர் பாடல்கள், பேச்சுக்கள் என்பன இடம்பெற்றது. இங்கு முதலாம் தரம் செல்லும் மாணவர்கள் மற்றும் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் அதிதிகளால் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் சிறு தொகைப் பண உதவியும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment