ஜனாதிபதியின் அரசில் இருக்கின்ற சகல முஸ்லீம் தலைவர்களும் விலகி மைத்திரியுடன் இணையவும்-சுகைர்

அஷ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டின் ஜனாதிபதியின் அரசில் இருக்கின்ற சகல முஸ்லீம் தலைவர்களும் விலகி  பொது ஆபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும். 

ஜனாதிபதி  சட்டத்தரணி எம்.எம். சுகைர். வேண்டுகோள் இன்று 35 கட்சிகள் ;இணைந்து கொழும்பு விகாரமாகதேவி உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட  நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் எம்.பியும் ;ஈராண் நாட்டின் தூதுவராகவும் ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்-

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 

இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில்தான் பௌத்த இயக்கமான பொதுபலசேனாவும் இணைந்துள்ளது. இந்த இயக்கம் முஸ்லீம்களுக்கு எதிராக காட்டிய அட்டகாசங்களை முஸ்லீம்கள் மறக்க மாட்டார்கள். நான் ஈராண் நாட்டின் தூதுவராக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் யுத்த வெற்றிக்கு அந்த நாட்டில் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன். யுத்தம் ஓய்ந்தபின் பல பள்ளிவசால்கள் தாக்கப்பட்டன. 

முஸ்லீம்களுக்கு பாரிய பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன. இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொதுவேற்பாளர் மைத்திரிபாலசிறிசேனாவின் வெற்றிக்காக 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றினைந்துள்ளன. இந்த வேற்பாளருக்கே சிறுபாண்மை மக்களது கிடைக்கும். 

 இந்த ஆட்சியின் கீழ் இருக்கின்ற முஸ்லீம் தலைவர்கள் உடன் விலகி எதிர்கட்சி ஜனாதிபதி பொதுவேற்பாளருடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமாறு அழைப்புவிடுப்பதாகவும் சுகையிர்  தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :