ஜனாதிபதிக்கு உலமா கட்சி ஆதரவா? உலமா கட்சித்தலைவர் விளக்கம்

டகங்களில் வெளியான செய்திகளின்படி நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எமது ஆதரவை மீண்டும் வழங்கி வருகின்றோமே தவிர ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு இன்னமும் வரவில்லை என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

2005ம் ஆண்டு முதல் ஜனாதிபதி அடையாளப்படம்-

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கிய உலமா கட்சி அரசியலில் மிகச்சிறந்த சேவைகளை செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டத்தை உண்மையாக முன்னெடுத்த போது முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கெதிராக நின்ற போது நாம் மஹிந்தவுக்கு அதரவாக பகிரங்கமாக செயற்பட்டதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்கள் பயங்கரவாத ஒழிப்புக்கு ஆதரவு தரவில்லை என்ற பழிச்சொல்லிலிpருந்து நாம் சமூகத்தை காப்பாற்றினோம். இராணுவத்தின் யுத்த வெற்றிகளின்; போது அதனை அரச ஊடகங்களில் பாராட்டுவதற்கு எந்தவொரு மௌலவியும் முன் வர அச்சப்பட்ட போது நான் இந்த சிவப்பு தொப்பியையும் போட்டுக்கொண்டு துணிந்து பேசினேன். 

அதே போல் 1992ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரிய நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலம் 2010ம் ஆண்டு வழங்கச்செய்தோம். இதன் மூலம் மௌலவிமார் உலமா கட்சியை பலப்படுத்துவார்கள் என நாமும் ஜனாதிபதி தரப்பும் நம்பினோம். 

ஆனால்; நாம் 2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது நன்றி கெட்ட உலமாக்களும் முஸ்லிம்களும் எமக்கு ஆதரவளிக்கவில்லை. மாறாக ஒரு மௌலவிக்கேனும் ஆசிரிய நியமனம் பெற்றுத்தராத முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களித்தார்கள். மௌலவி ஆசிரிய நியமனம் கிடைக்கப்பெற்றவர்களில் ஒருவர் கூட எம்மை பலப்படுத்த முன்வரவில்லை. இதன் காரணமாக இந்நியமனம் அதற்குப்பின் வழங்கப்படவில்லை. வீதிகள், கட்டிடங்ள் என்பதை விட முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமிய அறிவு என்பதே இம்மை மறுமை வெற்றியை தருவதாகும். அதற்குரிய மௌலவி ஆசிரிய நியமனத்தை நாம் பெற்றுக்கொடுத்தது வெறுமனே மௌலவிமாருக்கான நலன் மட்டுமல்ல முழு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன் சார்ந்ததாகும் என்பதை சமூகம் புரிந்து கொள்ளவே இல்லை. 

எமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமை கட்சியாக பதிவு பெற்றுள்ளது. இந்த நிலையில் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் சம்பவத்தை தொடர்ந்து நாம் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு சமூகத்துக்காக பொலிஸ், புலன் விசாரணை, மரண அச்சுறுத்தல் என்பவற்றுக்கு மத்தியில்; குரல் கொடுத்தோம். ஆனால் முஸ்லிம் சமூகம் எம்மை விட அரசுடன் ஒட்டியிருக்கும் முஸ்லிம் கட்சிகளையே ஆதரித்தார்கள் என்ற உண்மை எமக்கு பல உண்மைகளை குரிய வைத்தது. இந்த சமூகதம் தனக்காக குரல் கொடுப்பவர்களை விட அரசில் ஒட்டியிருப்பவர்களின் பின்னால் செல்வதிலேயே மகிழ்ச்சியடைகிறது என்ற உண்மையை இந்த இரண்டு வருட காலத்தில் நாம் கண்டு கொண்டோம். 

இந்த நிலையில் அரசின் தோழமைக்கட்சி என்ற வகையில் இந்த அரசுக்கு ஆதரவளிக்கும் படி எமக்கு அரச தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. அதனை நாம் பரிசீலனைக்கு எடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எமது ஆதரவை மீண்டும் வழங்குகின்றோம். இது புரியாமல் எம்மை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் வாக்களிpத்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்குத்தான் இன்னமும் ஆதரவளித்துக்கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தைக்கூட புரியாத முட்டாள்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. 

ஆக, உலமா கட்சி மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதே தவிர ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற இறுதித்தீர்மானத்துக்கு இன்னமும் வரவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைக்க சமூகத்தின் தேவைகள் அடங்கிய கோரிக்கைகளை நாம் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அவற்றை முன் வைத்து அதனை ஏற்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஆதரசவளிப்போம். அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமாயின் மக்கள் உலமா கட்சியுடன் ஒற்றுமைப்படுவதன் மூலமே முடியும். அவ்வாறில்லாமல் கும்பலோடு கோவிந்தா போடுவதற்கு உலமா கட்சி ஒரு போதும் தயாரில்;லை என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :