அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினார் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி!

ம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் 2014.12.26 வெள்ளிக்கிழமை காலை 9.05 மணியளவில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பதிவாளரும் ஆசிரியருமான எஸ்.வரதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் ஆலோசகரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும் அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 50 இற்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டணர். 

இப் பகுதியில் பெய்து வருகின்ற அடைமழை மத்தியிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் பூக்கள் மற்றும் பூமாலை அணிவித்து தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -