பல்கலைக்கழக நுழைவு மாணவர்களுக்கு காரைதீவில் "TRAKS" அமைப்பினால் பாராட்டு!

 காரைதீவு "TRAKS" (Tsunami Rehabilitation Association Karaitivu Srilanka) அமைப்பினரின் காரைதீவு பிரதேசத்தில் 2013ம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவு மாணவர்களுக்கான சாதனையாளர் பாராட்டு விழாவானது "TRAKS"அமைப்பின் தலைவர் திரு.P.மோகன் அவர்களின் தலைமையில் 17.11.2014 ம் திகதி திங்கட்கிழமை காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லுரியின் விபுலாநந்த அரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் மருத்துவ பீடத்துக்கு முதல்நிலை மாணவியாய் 3A சிறப்பு சித்தி பெற்று தெரிவு செய்யப்பட்ட செல்வி.S.கீர்த்திகாக்கு நினைவு பரிசில் மற்றும் 1 இலட்சம் ரூபாய் பணப்பரிசில் வழங்கி கௌரவித்ததோடு மேலும் மருத்துவபீடம் பொறியியல்பீடம் அடங்கலாக 2013ம் ஆண்டு வேறுவேறு பிரிவுகளில் பல்கலைக்கழக நுழைவு பெற்ற 33 மாணவர்களும் நினைவு பரிசில் வழங்கப்பட்டு பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி கலாநிதி பரதன் கந்நசாமி அவர்கள் கலந்து கொண்டதோடு மேலும் சிறப்பு அதிதிகள், விசேட அதிதிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :