ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்கள் முதுகெலும்பாக செயற்படுகின்றார்கள்- உபவேந்தர் அலியார்

 பி. முஹாஜிரீன்-

ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்கள் முதுகெலும்பாக செயற்படுகின்றார்கள் என தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் ஏ.பி.எம். அலியார் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் இந்திய கிராமிய மகளிர் தொழில் முயற்சியாளர்களுக்கான வணிக மற்றும் மேலாண்மை திறன் மேம்பாட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (18) செவ்வாய்க்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் தொழில் வழிகாட்டல் பிரிவுப் பணிப்பாளர் எம்.ஏ. சி. சல்பியா ஜெலீல் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் ஏ.பி.எம். அலியார் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கiயில், இன்று பெண்களே உலகில் சகல துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் இங்கு வந்துள்ள பெண் தொழில் முயற்சியாளர்களைப் பாராட்டுகின்றேன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வியோடு மட்டும் நின்று விடாமல் சமூக மட்டங்களிலும் தனது செயற்பாட்டை விரிவாக்கியுள்ளது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கும் சுயதொழில் முயற்சியாளர்கள் எதிர் காலத்தில் சுயமாகத் தொழில் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் எமது மாவட்டத்திற்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் அது பெருமை சேர்க்கும்.
சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில் பெண்களின் ஆளுமை மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆண்களுக்கு பெண்கள் குடும்பச் சுமையாக கருதப்படுவதால் குடும்பங்களில் இன்னோரன்ன பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. 

இவ்வாறான சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அந்தக் குடும்பங்கள் அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழும் என்பதில் ஐயமில்லை.

வறுமை காரணமாக சில நாடுகளின் பெண்கள் தவறான வழிகளில் செல்கின்றனர். இதனைத் தடுக்கவும் பெண்களின் அந்தஸ்தை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் இக்கால கட்டத்தில் மிகவும் சிறந்தவை எனவும் பதில் உபவேந்தர் ஏ.பி.எம். அலியார் கூறினார்.

இந்நிகழ்வில், தொழிலதிபரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான எம்.என்.எம். நபீல் பிரதம அதிதியாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார், இந்திய தேசிய தொழிநுட்ப நிறுவன முகாமைத்துவக் கற்கைப் பேராசிரியர் கலாநிதி ஜி.கன்னபிரான், இந்திய தேசிய தொழிநுட்ப நிறுவனப் பேராசிரியர் கலாநிதி பி. கலைச்செல்வி, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவர் எஸ். அகிலன், பீடாதிபதிகளான கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா, திருமதி சரீனா ஏ. கபூர், ஏ.எம். ஜூனைதீன் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :