ஜனாதிபதி 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு- காத்தான்குடியில் விஷேட துஆப் பிரார்த்தனை!






பழுலுல்லாஹ் பர்ஹான்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 18-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் விஷேட துஆப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர, மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம்.அனீஸ் அஹமட் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட், தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி, மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள்,உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ,இலங்கை நாட்டுக்கும் ஆசி வேண்டி விஷேட துஆப் பிரார்தனை இடம்பெற்றது இதனை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) நடாத்தி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :