அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனைப் பிராந்தியத்தின் நவீன அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு கல்முனை மாநகர சபையை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்ட கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்..நிஸாம் காரியப்பர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்/அசுஹர் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநகர சபையின் பிரதான நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட முதல்வர் சபா மண்டபத்திற்கு வரவேற்று அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதி முதல்வர் உட்பட உறுப்பினர்கள் சிலர் மேற்படி இரட்டை நகர உடன்படிக்கையை மேற்கொண்ட முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களை வெகுவாகப் பாராட்டி உரை நிகழ்த்தினர்.
அதேவேளை முதல்வர் தனது உரையில்; மேற்படி இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விபரித்துக் கூறினார். இதன்போது ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள், அதன் மூலம் கல்முனைப் பிராந்தியம் அடையவுள்ள நன்மைகள், இத்திட்டங்களுக்கான அணுகுமுறைகள் மற்றும் மாநகர சபை நிர்வாகம் மற்றும் பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்பு என்பன குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபை முதல்வருடன் தான் மேற்கொண்ட இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரதியை கல்முனை மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்/அசுஹர் அவர்களிடம் முதல்வர் கையளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment