18 ம் சீர் திருத்தமும் இன்றைய எதிரனிகளும்!

ன்று பொது வேட்பாளரை களமிறக்கி ஜனாதிபதியினை அரியாசனத்தில் இருந்து வீழ்த்த முயற்சிப்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை கவனத்திற் கொள்ள வேண்டிய கடப் பாடு எம் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது.

இன்று பொது வேட்பாளராய் அமைச்சர் மைத்திரி பால சிறி சேனவும் இவரை ஐ.தே.க,ஜே.வி.பி,ஹெல உருமய.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,முன்னாள் நீதி அரசர் சரத் ஏன் சில்வா,சிரானி பண்டார நாயக்க,சோபித தேரர்,ஜனாயகக் கட்சியின் தலைவர் பொன் சேகா என பலரும் ஒன்றிணைந்து களமிறக்கியுள்ளனர்.பொது வேட்பாளரை த.தே.கூ இன்னும் பல கட்சிகள் ஆதரிக்கும் என்ற எதிர் பார்ப்பும் மக்களிடையே உள்ளது.

இவர்கள் முன் வைத்துள்ள முதற் கோசம் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது.இந்த நிறைவேற்று அதிகாரம் யார் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது? ஐ.தே.க 1977 ம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை தமது இலக்காகவே அறிவித்திருந்தது.1978 ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை வேண்டுமென்று உறுதியாகவும் இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா..? 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து விடுவதாக கூறி இருந்த போதிலும் இல்லாது ஒழிக்காது நிறைவேற்று அதிகாரத்தில் இருந்த இலாபங்களை அனுபவித்தே ஆட்சியைத் துறந்தார்.

இன்றைய பொது வேட்பாளர்..?ஹெல உருமய..? என்பன நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுக்க ஜனாதிபதியினால் மாற்றம் செய்யப்பட்ட 18 ம் சீர் திருத்தத்தை ஆதரித்தவர்கள் தான்.இப்போது எதிர்க்கிறார்களாம் என்றால் ஏனோ அன்று எதிர்க்க தவறினார்கள்?

எனினும்,ஜே.வி.பி த.தே.கூ என்பவற்றை இது விடயத்தில் குறை காண முடியாத போதிலும் மு.கா,ஏனைய முஸ்லிம் கட்சிகள் இதனை ஆதரித்து பாரிய வரலாற்றுத் தவறை செய்துள்ளன.

எனினும்,பொது வேட்பாளரால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதென்பது வெறும் பேச்சிற்கே சாத்தியமாகும்.தற்போதைய பொதுக் கூட்டணி வெற்றி பெற்றாலும் மூன்றில் இரண்டு பெறும் பான்மைமையை பெறும் என்பது நட்பாசை தான்.மூன்றில் இரண்டு பெரும் பான்மை இன்றி இதனை எவ்வாறு நிலை நாட்டுவது?

பொது வேட்பாளர் ஜனாதிபதியாய் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமராய் யாரை? வைப்பது என்பதில் எதிரணிக் கூட்டுகள் தங்களுக்குள் சண்டை போட்டு அதற்கு தீர்வு எடுப்பதற்குமே அந்த 1௦௦ நாட்களும் போதுமாக இருக்கும்.யாவரும் பொருந்திக் கொள்ளும் பிரதமரை தேர்தெடுப்பது என்பது எட்டாக்கனி என்றே கூற வேண்டும்.எதிரணிக் கூட்டு இவ் விடயத்தில் பிளவுற அதீத வாய்ப்புக்கள் உள்ளன.அவ்வாறு பிளவுற்றால் பொது வேட்பாளர் மைத்திரிபால தலைமயிலான அரசு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடாத்துவற்தகு தள்ளப்படும்.இது விடயத்தில் எதிரணிக் கூட்டுகள் ஒன்றுபட்டாலும் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பொதுக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ள பாராளுமன்றத்தை கலைத்தே ஆக வேண்டும்.

சரி,ஆட்சியைக் கலைத்து சாத்தியாமகுமா? நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக ஆட்சியைக் கலைத்து பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் அரசு பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால்,ஐ.தே.க மிகப் பலமிக்கதாக உருவெடுக்கும்.அதே போன்று ஏனைய எதிர்க் கட்சிகளும் ஓரளவு உருவெடுக்கும்.நடுக் காட்டில் கண்ணைக் கட்டி விட்டது போன்று பொது வேட்பாளர் கட்சி எதுவும் இன்றி நிற்க வேண்டிய நிலைமை உருவாகும்.யாவரும்,நிறைவேற்று அதிகாரத்தை எதிர்ப்பதால் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவேற்றும் அளவு மூன்றில் இரண்டு பெரும் பான்மை ஆதரவை எதிர்க் கூட்டுகள் பெறலாம்.ஆனால் பொது வேட்பாளர் மைத்திரி பால தலைமையிலான அரசு எந்தளவு நீடிக்கும் என்பது கேள்விக் குறியே!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :