ஜனாதிபதிக்கு இந்த தேர்தல் பெரிய போட்டியாக இருக்கப் போவதில்லை:பிரச்சார கூட்டத்தில் ஆவேசம்!

னாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளரின்றி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. 

எமது ஜனாதிபதி அவர்களுக்கு இந்த தேர்தல் பெரிய போட்டியாக இருக்கப் போவதில்லை. நாட்டை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றி அமைப்பதற்கு நாங்கள் கட்சி வேறுபாடுகளை  மறந்து மீண்டும் எமது நாட்டுக்கு சுபீட்சதையும் போர்க்கால சூழலிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த மஹிந்த ராஜபக்ஷவை பெற்றிபெறச் செய்வோம் என்று குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவத்தகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான நெரஞ்சன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மாவத்தகம தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் கிளைக் காரியாலம் நேற்று 14-11-2014 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. 

மாவத்தகம பிரதேச சபைத் தவிசாளர் உபுல் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட று குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவத்தகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான நெரஞ்சன் விக்கிரமசிங்க அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாரிய அபிவிருத்தி வேலைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிவேக நெடுஞ்சாலை வீதி முதல் உள்ளூர் வீதிகள் யாவும் எமது கண்முன் பாரியளவிலான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 

எமது மாவத்தகம  நகரும் பாரியளவிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு அபிவிருத்திகள்  மேற்கொள்ளப்படுகின்றன. 2300 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மகாவலி ஆற்று நீரை மாவத்தகம வரை எடுத்து வந்து 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பயன் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நீர்விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது போல எண்ணற்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மீண்டும் எமது ஜனாதிபதி அவர்களை மூன்றாவது தடவையாக வெற்றிபெறச் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் மாவத்தகம பிரதேச சபையின் உப தவிசாளர் கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :