ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி வசமுள்ள மேல் மாகாண சபையில் வெகுவிரைவில் ஆட்சிமாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேல்மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளருமான எம் எஸ் எம் பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் ஊடகவியளாலரொருவர் மேல் மாகாண சபையில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் குறித்து வினவியபோது இந்த கருத்தை வெளியிட்டார்.மேல் மாகாண சபையில் உள்ள 104 மொத்த ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 28 ஆசனங்களும் பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு 9 ஆசனங்களும்,ஜேவீபிக்கு 7 ஆசனங்களும் ,ஹெல உறுமயவுக்கு 3 ஆசனங்களும், மனோ மற்றும் முஸ்லீம் காங்கிரசுக்கு தலா 2 ஆசனங்களும்,ரிசாத் மற்றும் சமசமாஜ கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனம் வீதமும் உள்ளன.
ஜாதிக ஹெல உறுமய அரசை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இதர எதிர்கட்சிகள் மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஓரிரு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கான முயற்சிகள் கைகூடியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு மேல் மாகாண சபையின் பிறந்த நாள் பரிசை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
.jpg)
0 comments :
Post a Comment