ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் ஜனாதிபதியின் பலத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அனைவருடனும் சேர்ந்து ஒன்றிணைந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நோக்கம் என்றும் அதன்படி ஹெல உறுமயவின் யோசனைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கையில் திடீரென அவர்கள் அரசாங்கத்தை விட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெல உறுமயவின் 35 யோசனைகளில் முக்கியமானவை உள்ளதாகவும் அது குறித்து திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும் ஜனாநாயக நாட்டில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment