பைஷல் இஸ்மாயில்-
கிராமத்தையும், நகரையும் இணைக்கும் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 35 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலமாக அட்டாளைச்சேனை கரடிக்குளம் விவசாயப் பாதைக்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று செவ்வாய்க்கிழமை(18) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.நஸீர், மற்றுமுஅட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், உதவிப்பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
கரடிக்குளம் பிரதேசத்தில் 450 ஏக்கர்களில்; விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயிகள் போக்குவரத்துச் செய்வதில் பல ஆண்டு காலம் பல்வேறு அசௌகரியங்களையும், ஆபத்துக்களையும் எதிர்கொண்டு வந்திருந்தனர்.
மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் விவசாய அமைப்புக்கள் கிழக்கு மாகாண அமைச்சரிடம் விடுத்து வேண்டுதலின் பேரில் இதற்கான பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment