வடமேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு இன்று 24-11- 2014 வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு பொதுச் சிரமதானம் நடைபெற்றது.
வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த வேலைத் திட்டம் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 1600 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இந்த டெங்கு ஒழிப்பு நடவகைக்கை அதிபர் ஐ, அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் பாடசாலையின் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு பொதுச் சிரமாதானப் பணிகளில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment