அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் என்னிடம் உள்ளன. எனினும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே சலூன் கதவுகளை போன்றே உள்ளன. யாரும் வரலாம். யாரும் போகலாம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகியவற்றுக்கு இடையிலான ஏ-12 வீதியை நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் இதற்கு முன்னர் கட்சியைவிட்டு விலகிச் சென்று மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இவ்வாறு செய்துள்ளார். ஆனால் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை.
அரசாங்கத்துக்குள்ளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் சிறந்த சுதந்திரம் காணப்படுகின்றது. அதனை அனைவரும் அனுபவிக்கலாம். அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் என்னிடம் உள்ளன.
எனினும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன். அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே சலூன் கதவுகளை போன்றே உள்ளன. யாரும் வரலாம். யாரும் போகலாம்.
.jpg)
0 comments :
Post a Comment