ஏ.எம்.ஹஸ்னி ரஸா-
ஜனநாயகம் மிக்க நாட்டில் சுதந்திர ஆட்சித் தலைமைத்துவத்தை வெல்வதற்காக களமிறங்கியிருக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சி சார் உறுப்பினரும், அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளர் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
கடந்த பல தசாப்த காலமாக இந்நாட்டில் பல்வேறு விதமான உட்கட்டுமான அபிவிருத்திகளை செய்து எமது நாட்டிற்கு பாரிய பங்களிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செய்திருந்தாலும் மக்கள் மன்றத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸவினுடைய கட்சிக்குள் இருந்து பதவிகளை தூக்கி வீசிவிட்டு சுகாதார அமைச்சராகவும் அக் கட்சியினுடைய பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று பொதுக் கூட்டுக்களின் பொது வேட்பாளராகவும் அதேபோன்று இந்த நாட்டின் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் ஒழிப்பேன் என்று குறிப்பிட்டு இந்த நாட்டினுடைய பிரதமர் ஆட்சியினை கொண்டு வந்து பிரதமராக றணில் விக்கிரம சிங்ஹ அவர்களையும் கொண்டுவருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பான ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டும். சர்வாதிகாரப் போக்கிலிருந்து இந்த நாட்டை ஒரு சமாதானமிக்க நாடாக மாற்ற வேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்களினுடைய ஜனநாயக, நில உரிமைகள், பாதுகாப்பு என்ற பல்வேறு விடயங்களிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும். என்பதற்காக பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை களமிறங்கியிருக்கின்றது.
இந்த விடயம் மக்கள் நலன் சார்ந்ததாக இருப்பதனால் மைத்திரிபால சிறிசேனவிற்கும், இவரை அங்கீகரித்து ஒன்று சேர்ந்திருக்கின்ற அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன

0 comments :
Post a Comment