மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்த அவசர குழுக் கூட்டமொன்று இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நகர சபையின் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதேச செயலர் எஸ்எல்எம் ஹனிபா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஏஎம்எம்.ஹஸீர் மற்றும் பிரதேச பொது நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தனர்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதனால் எதிர்பார்க்கப்படும் வெள்ளம் மற்றும் கடும் காற்று போன்ற அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க எடுக்கப்படவேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டது.
அவசரகால நிலைமையின்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தயாராகவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment