ஜானாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கப்போகின்றது-சாபி ரஹீம்

இக்பால் அலி-

னாதிபதித் தேர்தலில் சூடுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையில் சிறுபான்மையினக்  கட்சிகள் யாரை ஆதரிப்பது என்ற நிலை இன்னும் மந்தகதியிலே இருந்து வருகின்றனது. 

எனினும்  சிறுபான்மையின மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன என்று  மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

இந்தத் தேர்தல் மிக முக்கியமாக சிறுபான்மையின தமிழ் - முஸ்லிம் மக்களுடைய வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கப் போகின்றன. கடந்த 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்மார நாயக்கவின் ஆட்சி காலத்தின் போது கட்சி தாவல் நடைபெற்றது. அதன் சூத்தரதாரி பொலன்நறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி. டி. சில்வா . அவர் மின்னேரியா தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர். அந்தக் கட்சி தாவல் மூலம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

இன்று சிறுபான்மையினக் கட்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இருக்கின்றன. அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம்வாய்ந்த தமிழ் கூட்டமைப்பு முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.

மலையகத்தைப் பொறுத்தவரையில் சில கட்சிகள் அரசாங்கத்துடன் இருந்தாலும் மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி தாவியுள்ளார். நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது சிறுபான்மையின மக்களுடைய வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் சரிசமனாக சென்றுள்ளன.

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து சிறுபான்மையினக் கட்சிகள் அரசாங்கத்தின் பக்கம் இருந்தாலும் அவ்வரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கசப்பான சம்வங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த மக்களுடைய வாக்குகள் எந்தப் பக்கம் போகும் என்று தீர்க்கமாகச் சொல்ல முடியாதுள்ளது.

எனவே இந்த சிறுபான்மையின மக்களுடைய வாக்குகள் நாட்டு நல்லதாய் அமையக் கூடிய வகையில் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :