பி. முஹாஜிரீன்-
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பாடசாலை மட்ட விஞ்ஞான கற்கை உபகரணங்கள் மற்றும் கருவிகள் தொடர்பான கண்காட்சி இன்று (20) வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பாடசாலையில் கடமையாற்றும் கல்விக் கல்லூரி கட்டுறு பயிலுனர் ஆசிரியர் எம்.எஸ்.எம். றிபானின் முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விஞ்ஞானக் கற்கை உபகரணங்கள் மற்றும் கருவிகள் தொடர்பான கண்காட்சி அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலை ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலைப் பிரிவு மாணவர்கள் இக்கண்காட்சி மூலம் பயனடைந்தனர்.
மேலும், இக்கண்காட்சியினால் தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்கள் தங்களது பாடத் திட்டத்திலுள்ள பல்வேறு விஞ்ஞான செயல் திட்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள், கருவிகள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றதுடன் பல்வேறு செயல்முறைப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டனர்.
0 comments :
Post a Comment