நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் 19ஆவது அரசியல் சீர்திருத்த முன் மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (18.11.2014) கொழும்பில் நடை பெற்றது.
ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கூட்ட மண்டபத்தில் Nகுபுபுயின் பொதுச் செயலாளர் ஆசு.நஜா முஹம்மத் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா அவர்களும் அரசியல் யாப்பு நிபுணர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண அவர்களும் கலந்து கொண்டு விசேடஉரையாற்றினர்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி, நாட்டின் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படாமை, நீதித்துறை சுதந்திரமாக செயற்பட முடியாமை, நாட்டின் முழு அரசியந்திரமும் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம், வீண்விரயம் போன்றவற்றால் தமது கடமையினை சரியாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள், நல்லாட்சி, நிலையான பொருளாதார அபிவிருத்தி மற்றும் கல்வி, சுகாதார சேவைகள் என்பன பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
ஆனால், நாட்டின் மீது பற்றும் அக்கறையும் கரிசனையும் கொண்டவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தி முழு நாடும் மக்களும் பயனடையக்கூடிய நல்லாட்சியொன்றை கட்டி எழுப்புவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய அரசியல் மாற்றம் ஒன்றினை கொண்டுவருவதே அவசியமானது என்கின்றனர்.
அந்த வகையில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையினை முற்றாக ஒழிப்பதன் ஊடாகவோ அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதன் ஊடாகவோ பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு மாற்றம் ஒன்றினை கொண்டுவர வேண்டும். மேலும் 17வது திருத்தச் சட்டத்தினூடாக கொண்டு வரப்பட்ட சுயதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதனூடாகவும் தற்போது நடை முறையிலிருக்கும் தேர்தல் முறையல் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பல்வேறு முன்மொழிவுகள் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன.
எனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தேசிய நலனை முன்னிறுத்தி சகல சமூகங்களும் தமது உரிமைகளை பெற்றுக் சுதந்திரமாக வாழக் கூடிய அரசியல் சூழ்நிலையொன்றை ஏட்படுதுவதற்கான நல்லாட்சியை இலக்காகக் கொண்டு செயற்படும், முஸ்லிம் சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் என்ற வகையில் தேசிய அரசியல் சக்திகளால் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மாற்றத்திற்கான தேசிய வேலைத் திட்டத்தில் இணைந்துள்ளது.
அந்த வகையில் பல முனைகளிலும் இத் தேசிய சக்திகள் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
அந்தத் தொடரிலேயே நேற்றைய கலந்துரையாடலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.'தூய நாளைக்கான தேசிய சபை' முன்வைத்திருக்கும் உத்தேச 19வது திருத்தச் சட்டத்திற்கான பிரேரணைகளும், சமூக நீதிக்கான தேசிய இயக்கம் முன்வைக்கும் ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கி பாராளுமன்றத்தை முறையொன்றை அறிமுகப்படுத்தவும், சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாகக் கூடியதும், தேர்தல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வரக்கூடியதுமான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இம்முன்மொழிவுகளை வரைவதில் முக்கிய பாத்திரங்களை வகிக்கின்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன அவர்களும் இம்முன்மொழிவுகள் குறித்த விரிவான விளக்கங்களை முன்வைத்ததோடு கேள்விகளுக்கும் பதிலளித்தனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (தவிசாளர் பொறியலாளர் MM.அப்துர் ரஹ்மான், NFGG பற்றியும், அதன் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடலின் நோக்கம் குறித்தும் தனது தலைமை உரையில் தெளிவுபடுத்தினார்.
இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் விளக்கங்களின் அடிப்படையிலும் உத்தேச அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையும் நலன்களையும் உத்தரவாதப் படுத்தக்கூடிய முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களில் பல்வேறு
முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொருளாளர் சட்டத்தரணி இம்தியாஸ் வாஹாப், தலைமைத்துவ சபை அங்கத்தவர் ஹனான்இ தலைமைத்துவ சபை அங்கத்தவரும் வட மாகாண சபை உறுப்பினருமான அய்யூப் அஸ்மின்இ மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதுத்துவப் படுத்தக்கூடிய தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகள்இ,சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,உலமாக்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment