பி.எம்.எம்.ஏ.காதர்-
நிஜவாழ்வின் பிரதிபலிப்புக்களே கற்பனை கலந்து கதைகளாக்கப்;படுகின்றன இதில் சமூக அவலங்களும். குடும்ப அவலங்களின் பின்புலங்களுமே கதைகளாக வெளிக்கோண்டுவரப்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் தெரிவித்தார்.
மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.ஆர்.அப்துல் ஹமீட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'மாமி இல்லாத பூமி' நூல் வெளியீட்டு வைபவம் அண்மையில்; (2014-11-15) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றிய போதே நீதிபதி மனாப் இதனைத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தரும் கவிஞருமான எம்.பி.ஏ.ஹசன் (மருதமுனை ஹசன்)தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இதில் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார, வீடமைப்பு, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல,; சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக ; மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் நிதியத்தின் தலைவரும,; விரிவுரையாளருமான ஏ.ஏ.நுபைல், மர்ஹூம் மருதூர் கொத்தன் நிதியத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. கலீலுர் றகுமான், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,அல்-மருதமுனை சஞ்சிகையின் ஆசிரியர் எம்.சி.எம்.அப்துல் காதிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்;.
இங்கு நீதிபதி அப்துல் மனாப் மேலும் உரையாற்றுகையில் :- 'மாமி இல்லாத
பூமி'சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் ஹமீட் சமூகச் சீர்கேடுகளையும், மனிதவாழ்வில் ஏற்படுகின்ற துன்ப துயரங்களை, அவரது சிறுகதைகள் ஊடாக வெளிக் கொண்டு வந்திருக்கின்றார்.
இன்றைய நவீன யுகத்தில் நவின சாதனங்களின் வருகையினால் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. தொலைக் காட்சி, இணையத்தளம், கையடக்கத் தொலைபேசி என்பவற்றின் பக்கம் சிறியோர் தொடக்கம் பெரியோர் வரை ஈர்க்கப்பட்டு விட்டார்கள். வேளியிடப்படுகின்ற புத்தகங்களை வாங்கி வாசிப்பதற்கு யாரும் இல்லாத நிலை உருவாகிவிட்டது.
இந்த நிலையில் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஆகவே எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூலாக்குவதற்கு சமூக ஆர்வலர்களும் தனவந்தர்களும், சமூக சேவை நிறுவனங்களும் முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment