கல்முனை அல்-பஹ்ரியா பாடசாலை சுற்றுலாவின் போது சீகிரியா பொலிசாரினால் ஒரு மாணவி கைது

ல்முனை அல்-பஹ்றியா மஹா வித்தியாலைய பாடசாலை மாணவ , மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்காக சீகீரியாவிற்கு சென்றிருந்தவேளை அங்கிருந்த புராதான சிலைஒன்றில்  பெயர் எழுதிய ஒரு மாணவியை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்த பொலிசாரின் செயலினால் 37 மாணவ, மாணவிகளும் 06 ஆசிரியர்களும் அடங்களாக குறித்த மாணவியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொலிசில் காத்து நிற்கின்றனர்.


இது சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு கல்முனை அல்-பஹ்ரியா பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது:

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக சென்றிருந்த வேளை ஒரு மாணவி சீகிரியாவில் உள்ள ஒரு ஓவியத்தில் எழுதினார் என்ற குற்றத்தில் சீகியாவிற்கு பொறுப்பாக இருக்கின்ற காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.  அதனால் அம்மாணவியை அழைத்துச்செல்ல சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் இதனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலாச்செல்கின்றபோது  மாணவர்களுக்கான விளிப்புணர்வு, அறிவூட்டல் முக்கியமாக நடைபெறவேண்டும், எவைகள் செய்யவேண்டும் எவைகள் செய்யக்கூடாது, என்பன கட்டாயம் சொல்லிக்கொடுத்து அழைத்துச்செல்ல வேண்டும். சில மாணவர்கள் இன்னும் குழந்தைகளாக சிறுபிள்ளைத்தனத்துடன் செயற்படுவதால் அறிவூட்டல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதனைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :