இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் கிளைகளான இம்போட் சர்வதேச வானொலி, இம்போட்மிரர் முபைல் குறுஞ்செய்தி, இம்போட்மிரர் செய்தித் தளம் ஆகியவை இணைந்து நடாத்திய அகில இலங்கை தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப்போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும், கட்டுரை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதல்களும் வழங்கும் மாபெரும் விழாவும், அம்பாரை மாவட்ட மூத்த ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும்.
அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை 4.00மணிக்கு இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு கட்டுரை போட்டியில் பங்கு பற்றிய மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வு இம்போட் சர்வதேச வானொலி, இம்போட் ஆன் லைன் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..

0 comments :
Post a Comment