புலிகள் தாக்குதல் நடாத்திய -காத்தான்குடி பள்ளிவாயலுக்கு அமெரிக்க தூதுக்குழு விஜயம்





பழுலுல்லாஹ் பர்ஹான்-

டந்த 03-08-1990 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள்; நடாத்திய தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் (18-11-2014) இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.

அங்கு விஜயம் செய்த அக்குழுவினரை மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் தலைவரும்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ.எம்.சுபைர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இதன் போது தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய இடத்தையும், மரணித்தவர்களின் பெயர் பட்டியலையும் பார்வையிட்டனர்.

மேற்படி பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொர்பில் மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உப செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் ஆகியோரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் இணைப்பாளர் நௌசாட் முஹைதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர், தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி, மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்தபோது 103 முஸ்லிம்கள்  புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :