இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று (18-11-2014) செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.
காத்தான்குடிக்கு விஜயம் செய்த அக் குழுவினர் முதலாவதாக காத்தான்குடி நகர சபைக்கு சென்றனர். அங்கு சென்ற அக்குழுவினரை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில், காத்தான்குடி நகர சபை தவிசாளரினால் திண்மைக்கழிவு முகாமைத்துவம், கல்வி, காத்தானகுடியிலுள்ள இடப்பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பிலும், நகர சபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இங்கு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி நிகோலி சுலிக்ஸிடம் திண்மைக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான திட்ட முன்மொழிவு அறிக்கை கையளிக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் நூலகத்திற்கு அவசரமாக சிறுவர்களுக்கான ஆங்கில புத்தகங்களை இலவசமாக வழங்கவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் காத்தான்குடி பொது நூலகத்தில் தொழில்நுட்ப பிரிவொன்றை அமைத்து தருவதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி நிகோலி சுலிக்ஸ் உறுதியளித்ததாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் இணைப்பாளர் நௌசாட் முஹைதீன், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன், காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், சியாட், அலிசப்ரி உட்பட நகர சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment