பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை பிரதேச செயலகப்பிரில் உள்ள 6084 திவிநெகும குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா இன்று (18-11-2014) வழங்கப்பட்டது. மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்' என்ற தொனிப் பொருளில் வீடுகளில் உள்ள சிறிய குறைபாடுகளைத் திருத்தவதற்கு முதல் கட்டமாக இந்த நிதி வழங்கப்படுகின்றது.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இந்த நிதியை வழங்கினார்.
விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.மங்கள விக்கிரம ஆராச்சி, கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ் உமர் அலி, திவிநெகும அதிகாரி எஸ்.எஸ்.பரீரா ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நிதியை வழங்கினார்கள்.
மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும வங்கி ஊடாக 3068 குடும்பங்களும், கல்முனைக்குடி திவிநெகும வங்கி ஊடாக 3016 குடும்பங்களுமாக 6084 குடும்பங்களுக்கு 151 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment