முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் தீர்மானங்களை பொறுத்தே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவெடுப்போம் என தெரிவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எவருடனும் கூட்டுச்சேர இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் மு.கா.வின் நிலைப்பாடு
என்னவென வினவிய போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதனால் பலன் எதுவும் கிடைக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு அரசுடன் கூட்டுச்சேரும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில கோரிக்கைகளை முன்வைத்தது. அவை இன்னும் முழுமைப்படாத காரணத்தினால் தொடர்ச்சியாக அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். நேற்று முன்தினமும் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது கோரிக்கைகள் தொடர்பில் பேசினோம். எமது கோரிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் உள்ளூராட்சிமன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரையோர பிரதேசப் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படவுமுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தை உதாசீனப் படுத்த முடியாது. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு ஏதேனும் ??????? கிடைக்குமா என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எது எவ்வாறு இருப்பினும் இன்னமும் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. வாக்குறுதிகள் கொடுப்பதை விடவும் அவற்றினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் ஆதரவு யாருக்கு என்பது தீர்மானிக்கப்படாது.
ஜே.வி.பி.யுடன் பேச்சு
அதேபோல் நேற்று முன்தினம் மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம். இதில் எவருடனும் கூட்டுச்சேரும் வகையில் பேசவில்லை. எமது நிலைப்பாடு என்ன? நாங்கள் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பவற்றையே பேசினோம். பொது கூட்டணியில் களமிறங்குவது அல்லது எதிரணியினை ஆதரிப்பது என்ற எந்தவொரு முடிவும் நாம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி

0 comments :
Post a Comment