எதிரணி பொதுவேட்பாளர் யார் ரணிலா? சஜித்தா? பூதமா? அமைச்சர் விமல் கேள்வி!

திர்க்­கட்­சியின் பொது வேட்­பாளர் யார்? ரணிலா? சஜித்தா? அல்­லது பூதமா? என்­பதை எதிர்க்­கட்சி வெளி­யிட வேண்டும். வேட்­பாளர் ஒரு­வரை தேடிக்­கொள்ள முடி­யாத எதிர்க்­கட்­சியால் எவ்­வாறு நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று அமைச்சர் விமல் வீர­வன்ச நேற்று சபையில் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அரசை கவிழ்க்க ஒரு போதும் துணை­போ­க­மாட்டோம் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செல­வுத்­திட்டம் மீதான வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை பொறி­யியல் சேவைகள் மற்றும் பொது வச­திகள் தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் விமல் வீர­வன்ச இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

அர­சாங்­கத்­துடன் பங்­கா­ளி­க­ளாக நாமி­ருக்­கின்றோம். ஆனால், பல விட­யங்கள் தொடர்­பாக அர­சுடன் கொள்கை ரீதி­யாக பிரச்­சி­னைகள் உள்­ளன. அவை தொடர்பில் அர­சுடன் விவா­திப்போம். பிழை­களை சரி செய்து கொள்வோம்.

பிழை­யான பாதையில் அரசு செல்­லு­மானால் அதனை சரி­யான வழிக்கு கொண்டு வர முயற்­சிப்போம். சரி செய்வோம்.

அர­சு­ட­னான பய­ணத்தை தொட­ருவோம். அதை­வி­டுத்து வங்­கு­ரோத்து அர­சியல் நடத்தும் கொள்­கை­யில்­லாத எதிர்க்­கட்­சி­க­ளுடன் இணைய மாட்டோம். ஒரு சில­ரைப்போல் அரசைக் கவிழ்க்க நாம் துணை போக­மாட்டோம். எதிர்க்­கட்­சி­களின் கனவு ஒரு போதும் நிறை­வே­றாது. அர­சாங்கம் இன்று ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ராகி விட்­டது. எமது பக்­கத்தில் வேட்­பா­ளரும் தயா­ராகி விட்டார். ஆனால் எதிர்க்­கட்­சி­களின் வேட்­பாளர் யார்? பொது வேட்­பாளர் யார்? என்­பது தொடர்­பாக இன்­று­வரை தெரி­யாது.

ரணிலா? சஜிதா? அல்­லது பூதமா? வேட்­பாளர் என்­பதை வெளி­யி­டுங்கள். அரசு எதிர்­வரும் 18ம் திகதி ஜனா­தி­பதி தேர்­தலை அறி­விக்­கவும் தயா­ராகி விட்­டது.

எனவே, வேட்­பா­ள­ரைக்­கூட தெரிவு செய்ய முடி­யாத எதிர்க்­கட்­சி­யுடன் இணை­வதா? இன்று 20 – 30 வரு­டங்­க­ளாக பெரும்­பா­லான மக்கள் சட்ட விரோ­த­மாக குடி­யி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு சட்ட ரீதி­யான அந்­தஸ்தை வழங்கி உறு­தி­க­ளையும் வழங்­கி­யுள்ளோம்.

2011 க்கு பின்னர் ஒவ்­வொரு வரு­டமும் 4 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வீடு­களை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு புதி­தாக வீடு­களை கட்­டு­வ­தற்கு முன்னே கடன்­களை வழங்குகின்றனர்.

தொடர்மாடி வீட்டுத்திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் சேரிகளில் வாழும் மக்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :