கல்முனைப் பிராந்தியத்தில் “ஆரோக்கியமான இலங்கை” வேலைத்திட்டம்

எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர் -

சுகாதார அமைச்சினால் எதிர்வரும் மார்கழி மாதம் 01 ஆந் திகதிமுதல் 07 ஆந் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட விருக்கும் “ஆரோக்கியமான இலங்கை” (நிரோஜி லங்கா) எனும் தேசிய வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்தியத்தினுள் கீழ்வரும் அமைப்பில் நடைமுறைப் படுத்துவதற்காக சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி: அ.லெ.அலாவுதீன் அவர்கள் தெரிவித்தார்கள்.

தேசிய திட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 07நாட்களும் சகல செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு சகல சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளை பிராந்திய அலுவலகத்துடன் ஒருங்கிணைப்பதற்காக பிராந்திய மட்டத்தில் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வொழுங்குகள் பின்வருமாறு:

முதலாம் நாள்:

பாடசாலை, பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் சுகாதார மேம்பாட்டுக்கான நிகழ்வுகள்.

பிரதான நிகழ்வு – நிந்தவூர் தொழில் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இடம் பெறும். இதற்கான வளவாளராக தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி டொக்டர். எம்.ஏ.சீ.எம். பஸால் கலந்து கொள்வார்.

பிராந்திய இணைப்பாளர்கள்: ஜனாப்:எஸ்எம்.அஸீஸ் – (சு.க.அ)

திருமதி: கே. தியாகராஜா –( சு.க.அ)

இரண்டாம் நாள்:

தொற்று நோய் முற்பாதுகாப்பு வேலைத்திட்டம்

பிரதான நிகழ்வுகள்:

01. விசேட டெங்குக் கட்டுப்பட்டு நிகழ்வுகள் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெறும். இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

02. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், காச நோய் கட்டுப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். இதில் பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மற்றும் காச நோய்க் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரியும் கலந்து கொள்வார்கள்.

03. ஆலயடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசர் நாய்க்கடி தடுப்பூசி நிகழ்வு பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெறும்.

பிராந்திய இணைப்பாளர்கள்: டொக்டர். எஸ்.செனரட்ண – பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி திரு: பீ.பேரம்பலம் - SPHID ஜனாப்: எம்.ஐ.எம்.சலாஹதீன் - PHFO

மூன்றாம் நாள்:

போசாக்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தினம்

அரபுக் கல்லூரிகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உணவு மேம்பாடுகள் பற்றிய நிகழ்வுகள்.

பிரதான நிகழ்வு – நிந்தவூர் அரபுக்கல்லூரியிpல் பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெறும்.

பிராந்திய இணைப்பாளர் - ஜனாப்: எஸ்.தஸ்தகீர் - உணவு மருந்து பரிசோதகர்

நான்காம் நாள்:

தொற்றா நோய்கள் தடுப்பு தினம்

பொதுமக்களுக்கும் அலுவலக உத்தியோகத்தர்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.

இணைப்பாளர் - டொக்டர். ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.சாபி – தொற்றா நோய் வைத்திய அதிகாரி

ஐந்தாம் நாள்:

அரச நிறுவனங்களில் சுகாதார மேம்பாடுகள் பற்றிய நிகழ்வுகள்

பிரதான நிகழ்வுகள் - சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான வாய் மற்றும் பல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு. இதற்கான வளவாளராக டொக்டர்.ஏ.எம்.கலீலுர் ரஹ்மான் - பிராந்திய பல் வைத்திய நிபுணர் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

இணைப்பாளர்கள் - ஜனாப். எஸ்.எம்.அஸீல் – (சு.க.அ)

திருமதி: கே.தியாகராஜா –( சு.க.அ.)

ஆறாம் நாள்:

போதைப் பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள்

பிரதான நிகழ்வு – திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட போதைப் பொருள் மற்றும் மதுசாரம் தடுப்புப் பற்றிய நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெறும். இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொள்வார்கள்.

இணைப்பாளர் - டொக்டர். ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.சாபி – தொற்றா நோய் வைத்திய அதிகாரி

ஏழாம் நாள்:

மதரீதியான மனநல மேம்பாடு செயற்திட்ட நிகழ்வுகள்

இணைப்பாளர்:டொக்டர்.அர்ஷாத் காரியப்பர்–உளநல வைத்திய அதிகாரி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :