த.நவோஜ்-
ஓட்டமாவடி பாலம் அமைந்துள்ள மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரம் பல காலமாக இரண்டு நேரங்களை மாத்திரமே துல்லியமாகக் காட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மணிக்கூடு 01.45 மணி நேரத்தை மட்டுமே சுட்டி நிற்கிறது. நண்பகல் 01.45 மணி நேரத்தையும் நடுநிசி 01.45 மணி நேரத்தையுமே சரியாகக் காட்டுவதாக பிரதேச மக்கள் பகிடியாக பேசிக் கொள்கின்றனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு பேரூந்தில் பயணிக்கின்ற பொதுமக்களும் குறித்த பகுதிகளிலிருந்து மட்டக்களப்பிற்கு வருகின்ற பொதுமக்களும் குறித்த பாதையினையே நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆயினும், ஓட்டமாவடிப் பிரதேசத்தின் மத்தியில் அழகாக நிமிர்ந்து நிற்கின்ற இம்மணிக்கூண்டு கோபுரம் சரியான நேரத்தைக் காட்டுவதாக தென்படவில்லை என மக்கள் அங்கலாய்கின்றனர்.
இம்மணிக்கூடு பல காலமாக இந்த நிலையில் இருந்தும் கூட எவரும் இதனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தொழில் நிமித்தம் இப்பிரதான பாதை வழியே பயணம் செய்கின்ற பயணிகளுக்கு இந்த மணிக்கூடு எப்போது தான் சரியான நேரத்தைக் காட்டுமோ? என கேள்வி எழுகின்றது.
எனவே இது சம்பந்தமாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment