முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியில் இணைந்து மைத்திரிபாலவுக்கு பிரச்சாரம்

அஷ்ரப் ஏ சமத்-

ரசாங்கத்தில் எதிராக நிலைப்பாடுகளில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அலையாக திரண்டு எழுவதால் இதனைச் சாதகமாகப் பயண்படுத்த முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியின் பிரதான பேச்சாளராக பயண்படுத்த உள்ளார்.

முஸ்லீம் காங்கிரசின் இருந்து விலக்கப்பட்ட பின்னர் 1996 ஆண்டில் ஜ.தே.கட்சி எம்.பியாக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் சந்திரிகா அரசாங்கத்திலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டவர் இவர் பிரதியமைச்சர், அமைச்சராகவும் பணியாற்றியவர். வட கிழக்கு மாகாணசபையின் முன்னளர் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் பதவி வகித்த காலத்தில் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டார். 

முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தவிசாளாராகவும் சேகு இஸ்ஸதீன் பணியாற்றியவர்.

இறக்காமம் மதினாபுரத்தில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் ஜ.தே.கட்சி முக்கியஸ்த்தர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் மேற்படி முடிபை அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் சிறுபாண்மைச் சமுகங்களின் அபிலாசைகளை அடைவதற்கான பாரிய தடைக்கல்லாக மட்டுமன்றி நாட்டை சர்வதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லவும் வழிவகுக்குமென மர்ஹூம் அஸ்ரப்பின் காலத்தில் ;இருந்தே சுட்டிக்காட்டி வந்தாகவும். தெரிவித்தார்.

சேகுஇஸ்ஸதீன் பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல்வேறு பொதுமேடைகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :