சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் தெஹியத்தக் கண்டிய உத்தரபுர கிராம வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீதி அபிவிருத்தி திட்;டத்தின் ஆரம்ப நிகழ்வு அமைச்சரின் தெஹியத்தக் கண்டி இணைப்பாளர் திரு.பியந்த தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன், நிறைவேற்றுப் பொறியியலாளர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment