முனாப் நுபார்தீன்-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இஸ்லாத்தை ஏற்று போதியளவு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அவனுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அல்லாஹ் அவனைத் திருப்தியுறச் செய்தானோ அவன் உண்மையாகவே வெற்றி பெற்று விட்டான். (நூல் : முஸ்லிம்)
மேற்படி நபிவழிச் செய்தி மனிதனுக்கு இன்றியமையாத மிக முக்கியமான திருப்தி எனும் ஒரு பண்பு பற்றி வலியுறுத்துகின்றது. திருப்தி என்பது அல்லாஹ்வால் வழங்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்வதாகும். அடியான் அல்லாஹ்வால் அவனுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்ளும் போது அவன் அல்லாஹ்வால் அவனுக்கு பங்கீடு செய்யப்பட்டதில் திருப்தியுற்றவனாவான் அப்போது அவனின் உள்ளம் அமைதி பெற்று நிம்மதியடைவான்.
திருப்தி கொள்வதின் மூலம் நாம் அடையும் நற்பயன்கள்:
1. திருப்தி என்பது அழிந்து போகக்கூடிய இந்த அற்ப்ப உலகிற்குப் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தும் அவனை அது பாதுகாக்கின்றது.
2. ஒரு இறை விசுவாசி தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதாரம் அது குறைவாக இருந்த போதிலும் ஆகுமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளச் செய்கின்றது.
3. ஆகுமானதல்லாதது எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை வெறுத்தொதுக்கி வாழ வழி செய்கின்றது.
4. திருப்தி கொள்ளுதல் என்பது ஆகுமான வழியில் பொருளீட்டாதிருத்தல் அல்லது தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் புறக்கணித்தல் என்பதோ அல்ல.
5. அது பிறருக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறைகாணாது அவர்கள்மீது பொறாமை கொள்ளாது வாழச் செய்வதாகும்.
6. திருப்தி கொள்ளுதல் என்பது அற்ப உலக சுகபோகங்களை அதிகரிக்கச் செய்வதற்காக தன்னைத் தனது சக்;திக்கப்பால் சிரமப்படுத்துவதிலிருந்து தடுத்துக் கொள்ளும்.
7. திருப்தி என்பது அற்ப உலக சுகபோகங்களுக்காக அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்துவதிலிருந்து பாதுகாப்பளிக்கும்.
8. திருப்தி என்பது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி இருதரப்பினர்க்கும் பொதுவானதே.
9. திருப்தி என்பது உள்ளம் சார்ந்ததாகும் அதற்கும் தன்வசமுள்ள செல்வங்களுக்கும் சம்மந்தம் கிடையாது.
10. திருப்தியடையாத ஒரு செல்வந்தன் அவன் தனது இறைவனை அறிந்து கொள்வதிலிருந்து அவனின் செல்வம் அவனைத் தடுத்துவிடக் கூடும்.
11. திருப்தியடையாத ஒரு ஏழை அவனின் வாழ்வாதாரத் தேடல் அவனை அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்தச் செய்து விடக் கூடும்.
12. ஒட்டு மொத்தத்தில் யார் அல்லாஹ்வால் தனக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு பொருந்திக் கொண்டு திருப்தியடைகின்றார்களோ அவர்களது வாழ்க்கை இவ்வுலகில் மணமானதாக மலரும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆணாயினும்ää பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும்ää நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(அல்-குர்ஆன் : 16:97)
மேற்படி வசனத்திற்கு விரிவுரை வழங்க வந்த அனேகமான விரிவுரையாளர்கள் மணமான வாழ்க்கை என்பது திருப்தி கொள்ளுதல் என்றே விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஏனெனில் ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரங்களைக் கொண்டு திருப்தி கொள்ளாதவரை மணமான நிம்மதியான வாழ்க்கையினை அடைந்து கொள்ள முடியாது.
ஆதலால்தான் அல்லாஹ் திருப்தியுறாது பேராசை கொண்டு வாழக்கூடிய ஏழை மற்றும் செல்வந்தர் ஆகிய இரு தரப்பிகளைப் பற்றியும் இவ்வாறு கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லைää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்லää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும்ää நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்க (அல்-குர்ஆன் : 102: 1-8)

0 comments :
Post a Comment