ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆறு சபை உறுப்பினர்களால் சுமத்தப்பட்ட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மையினை இணைய நாளிதல் வாசகர்களுக்காக அறிந்து கொள்ளும் முகமாக நேற்று (03.11.2014) பிரதேச சபையில் தவிசாளர் ஹமீட் அவர்களையும், செயலாளர் சு.தர்மலிங்கத்தையும் இம்போட் மிரர் செய்தியாளர் அஹமர் இர்ஸாட் அவர்களால் பிரதேச சபையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சந்திப்பில் உறுப்பினர்களால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தவிசாளரும் சபையின் செயலாளர் சு.தர்மலிங்கமும் முற்றிலும் எதிராக தெரிவித்த மாற்றுக்கருத்துக்களை தொகுத்தார் எமது செய்தியாளர் இர்ஸாட்;
ஹமீட் அவர்கள் 2006ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைதேர்தலில் 2500 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று முதன் முதலாக பிரதேச சபைக்கு தெரிவாகி பிரதி தவிசாளராகவும், பிந்திய ஆறு மாத காலப்பகுதியில் தவிசாளர் பதிவியையும் வகித்ததோடு, 2011 ஆண்டு நடைபெற்ற தற்போதைய பிரதேச சபைக்கான தேர்தலில் கல்குடாவின் சிரேஸ்ட அரசியல் தலைமையின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை முஸ்லிம் கங்கிரஸ் கட்சியில் முதன்மை வேற்பாளராக போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளான 4983 வாக்குகளையும் பெற்று கல்குடாவின் சிரேஸ்ட்ட அரசியல் தலைமையின் தேர்தல் வாக்குறுதிக்கேற்ப ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளாராக கடமையை பொறுப்பேற்றிருந்தார்.
இவ்வாறு தற்போது பிரதேச சபையில் இருக்கின்ற அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் விடவும் அதிகளவிலான விருப்பு வாக்குகளுடன் பிரதேச மக்களின் ஆணையை பெற்று தவிசாளராக இருக்கின்ற எனக்கு இவர்கள் என் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களானது சிறுபிள்ளைத்தனமாகவே தென்படுக்கின்றது என்பதை கூறிய தவிசாளர், தான் பிரதேச சபைக்கு வந்ததன் பிற்பாடு என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ள அபிவிருத்திட்டங்களும், எனக்கு வாக்களித்த மக்கள் இன்னும் எந்த மாற்றமும் இல்லாமல் என்மீது வைத்துள்ள நம்பிக்கையுமே முக்கிய காரணங்களாகவும், சாட்சிகளாகவும் உறுப்பினர்களுடைய குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது என்பதற்கு முக்கிய சான்றுகளாகும்.
இவ்வாறன ஒரு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டே சென்ற வருடமும் உறுப்பினர்களால் அவர்களுடைய கெளரவத்தையும், அரசியல் இருப்பையும் தக்க வைத்து கொள்வதற்காக சுமத்தியை போன்று இம்முறை பிரதேச சபையானது அடுத்த தேர்தலை எதிர்நோக்க தயாராகவுள்ள இறுதிக்கால கட்டத்தில் சுய அரசியல் இலாபத்துக்காகவும், அரசியல் இருப்பை எதிர்வரும் தேர்தலில் தக்கவைத்து கொள்வதற்காகவுமே இவ்வாறான குற்றச்சாட்டை என்மீது சிறு பிள்ளைத்தனமாக சுமத்துகின்றார்கள். இதற்கு நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என தெரிவித்தார்.
எனது காலத்திலே முக்கிய அபிவிருத்திகளாக ஓட்டமாவடியில் 18 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதுடன், பொது சந்தை கட்டட தொகுதி, கட்சி வேறுபாடுகள் இன்றி கூடுதலான வீதிகளுக்கு வடிகானுடனான கொங்றீட் இடப்பட்டுள்ளமை, என்றும் வரலாற்றில் இல்லாதவாறு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை, பின்தங்கிய கிராமங்களில் குடிநீர் திட்டம், அதே கிராமங்களில் எல்லா வீதிகளும் பெக்கோ இயந்திரத்தின் மூலம் செப்பனிடப்பட்டுள்ளமை, பிரதேசத்தில் ஏழு முன்பள்ளி பாடசலைகளை நடாத்துதல், போன்ற வேலை திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
சிறுவர் பூங்கா அமைக்கப்பட்ட விடயத்திலும் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானதாகும் என தெரிவித்த தவிசாளர் இதற்கான 18 மில்லியன் ரூபாய்க்கான நிதி நெல்சிப் நிறுவனத்தின் மூலம் ஓதுக்கப்பட்டும் அதற்கான கொந்துராத்துக்களை பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் (யுஊடுபு) ஊடாக கேள்விமனுக்கோறல் மூலமாக கொடுக்கப்பட்டது என தெரிவித்ததுடன், மிகக் கூடிய விரைவில் கூடிய வசதியுடன் ஓட்டமாவடியில் பேரூந்து தரிப்பிடமும் அமைக்கப்படும் எனக்கூறினார்.
இவ்வாறு தன்னால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை கூறிய தவிசாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், திட்ட மிட்டு சுயலாபங்களுக்காக வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு எனக்கு நான்கு மாதங்கள் அவகாசம் திருந்துவதற்கு உறுப்பினர்களால் கொடுக்கப்பட்டது என்பது அப்பட்டமான பொய்யாகும் என்பதோடு,அவ்வாறு உறுப்பினர்களால் எனக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தால் அது சபையின் கூட்ட தீர்மான குறிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டிய தவிசாளார், வரவு செலவு திட்டம் தொற்கடிக்கப்பட்ட காலத்தில் சிறுவர் பூங்காஇ மற்றும் சந்தை கட்டட தொகுதியும் பூர்த்தி அடையாமல் காணப்பட்டதனால் கல்குடாவின் சிரேஸ்ட அரசியல் தலைமையின் கீழ் ஓட்டமாவடி, மீராவோடை பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களினதும், பொதுமக்களினதும் முன்னிலையில் ஆறு மாதங்களுக்குள் இவைகள் இரண்டும் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என ஏகமானதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் சிறுவர் பூங்கா ஏற்கனவே திறக்கப்பட்டும், சந்தை கட்டட தொகுதி பூர்த்தியாகும் தறுவாயில் உள்ளது என்பதை தனது மாற்றுக்கருத்தாக தவிசாளர் தெரிவித்தார்.
இம்முறை என்மீது முக்கிய குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் கோவை மற்றும் அதனோடு சமந்தப்பட்ட பொருட்கள் காணாமல் போனது சம்பந்தமான குற்றச்சாட்டினை மறுத்த தவிசாளர், நான் தவிசாளராக சபையினை பொறுப்பேற்கும் போது இது சம்பந்தமான ஆவணங்கள் ஏதும் இருக்கவில்லை என்றும் இது சம்பந்தமாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு முறைப்பாட்டு பிரதியுடன், இதுசம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சுட்டிக்காட்டப்பட்டு கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்கள உப அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த குற்றச்சாட்டானது உறுப்பினர்களால் உண்மைக்கு புறம்பான முறையில் திட்டமிடப்பட்டு எனது அரசியல் முகவிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ள அநீதிக்கு சோரம்போகின்ற குற்றச்சாட்டாகும் என்பதில் தான் தெளிவாக உள்ளதாக தெறிவித்தார்.
இது சம்பந்தமாக பிரதேச சபையின் செயலாளர் சு.தர்மலிங்கதிடம் கேட்ட போது தான் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலே (14.06.2010) அன்று கடமையினை பொறுப்பேற்ற போதும் அதற்கு பிற்பாடும் இந்த பிரதேச சபைக்கு சொந்தமன நீர் சுத்திகரிப்பு இயந்திரம் சம்பந்தமான ஆவணக்கள் ஏதும் என்னிடம் கையளிக்கப்பட வில்லை என்றும், இது சம்பந்தமான எந்த ஆவனமும் சபையில் இல்லை என்று தெரிவித்ததுடன், இது சம்பந்த மான பிரச்சனைகள் அனைத்தும் நான் கடமை ஏற்பதற்கு முன்னால் இருந்த நிருவாகத்தினதும், சபையின் செயலாளரின் காலப்பகுதியிலேயே இடம்பெற்றதாக தெரிவித்த செயலாளர், இந்த ஆவணங்கள் சம்பந்தமாக முதன் முதலில் உறுப்பினர் அன்வர் ஆசிரியரின் தலைமையிலேயே பிரச்சனை மசோதாவாக கொண்டுவரப்பட்டதாகவும், அதன் பிற்பாடே இது சமகாலத்தில் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், சபை அமர்வுகளின் மூலமாகவோ அல்லது இனக்கப்பாட்டின் மூலமாகவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண முடியும் என்பதனையும் செயலாளர் தர்மலிங்கம் சுட்டிக்காட்டினார்.
முறைகேடான ஊழியர் நியமனங்கள் சம்பந்தமாக விளக்கமளித்த தவிசாளர், அவ்வாறு ஏதும் இடம்பெற வில்லை என்றும் சபை அமர்வுகளின் தீர்மானங்களுக்கேற்பவே எல்லா உறுப்பினர்களுக்கும் நியமனங்கள் பகிர்தளிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையான முடிவுகள் ஏதும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரிவித்த தவிசாளர், அன்மையில் கொடுக்கப்பட்ட சுகாதார ஊழியர் நியன வைபவத்தில் கல்குடாவின் சிரேஸ்ட்ட தலைமை அழைக்கப்பட்டு அவர் மூலம் கொடுக்கப்பட்டதே இவர்கள்,வ்வாறான குற்றச்சாட்டுக்களை வைப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக செயலாளர் தர்மலிங்கம் கூறுகையில் சகல உறுப்பினர்களாலும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலாலரின் வேண்டுகோளுக்கினங்க குடிநீர் வினியோகிப்பதற்காக சாரதி ஒருவரும், ஊழியரும் சபையினால் நியமிக்கப்பட்டு அதற்கு சபையினால் சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதனை பிரதேச செயலகம் மீள செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த முறைகேடான ஊழியர் நியமனம் பற்றிய குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானது என ஆணித்தரமாக மறுத்துறைத்தார்.
சுமத்தப்பட்டுள்ள அடுத்த மிகப்பெரிய குற்றச்சாட்டான நிதிமோசடி, நிடியினை பிழையான முறையில் கையாளுதல் சம்பந்தமாக விளக்கமளித்த தவிசாளர், செயலாளர் ஆகியோர், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரைக்கான சகல கொடுப்பனவுகளும், வருமான, செலவீனங்களும் சபையில் விபராக சமர்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் பரிசீலனை செய்யப்பட்டும், சரி என உறுப்பினர் ஒருவரினால் முன்மொழியப்பட்டும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டும் அது சபையின் கூட்ட தீர்மான குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த இருவரும்,இக்குற்றச்சாட்டை சபையின் செயலாளர் என்ற வகையிலும் எல்லா சபை அமர்வுகளிலும் தான் கலந்து கொள்ளும் காரணத்தினாலும் இக்குற்றச்சாட்டில் ஓரளவேனும் உண்மை இல்லை என்பதோடு இது அநியாயமான முறையில் தவிசாளருக்கு எதிராக சுமத்தப்படுட்டிருக்கின்ற குற்றச்சாட்டு என்பதனை செயலாளர் சு.தர்மலிங்கம் சுட்டிக்காட்ட தவறவில்லை.
தொடர்ந்து தனது கருத்தினை தெரிவித்த தவிசாளார் மக்களாகவே தனக்கு தந்த இந்த உயரிய பதவியினை தான் இதயசுத்தியோடும் இறைவனுக்கு பயந்தவனாகவும் சரியான முறையில் செய்து வருவதாகவும், நான் பிரதி தவிசாளாராக இருந்த காலப்பகுதியில் அரசியல் காரணங்களுக்காகவும், பிரதேச சபை உறுப்பினர்களின் அதிர்ருப்தி காரணமாகவும் முன்னால் தவிசாளருக்கு பல பிரச்சனைகள் உருவான போது சபை அமர்வுகள் சரியான முறையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும், சபையின் நிருவாகம் நேர்த்தியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும் நான் தவிசாளருடன் இனைந்தே செயற்படதாகவும் கூறிய தவிசாளர், சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய இக்குற்றச்சாட்டுக்களானது வேண்டும் என்றே குறிப்பிட்ட ஒரு உறுப்பினரால் சோடிக்கப்பட்டு ஏனைய உறுப்பினர்களின் உதவிகளோடு என்மேல் சுமர்த்தப்பட்டுள்ளதாகவும், தான் எல்லா உறுப்பினர்களுடனும் கட்சி வேறு பாட்டுக்கு அப்பாற்பட்டு சுமுகமான முறையில் உறவினை பேனிவருவதாகவும்,உறுப்பினர் ஜுனைட் நளீமி தன்னுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ளதாகவும், அவர் கடைசி சபை அமர்வு நேரத்தில் சுகயீனமுற்று இருந்தாகவும், மகஜரில் கையொப்பம் இடுவதற்கு அவர் மறுத்த போதும் கடும் வற்புறுத்தலின் மத்தியிலேயே அவருடைய கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தவிசாளர் மிக மனவேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், எனது அரசியல் காலப்பகுதியிலே நான் மீராவோடை பள்ளிவாயலில் 21 பேர் கொண்ட நம்பிக்கையாளர் சபையின் தார்மீக பொறுப்பு வாய்ந்த தலைவராக இருப்பதாகவும், மீராவோடையில் இடம்பெருகின்ற 90 வீதமான வெலைத்திட்டங்கள், தனிப்பட்டவர்களின் பொது தேவைகளை உரிய முறையில் செய்து கொடுத்தல்,ஜனாஸாக்கள், பொலிஸ்பிரச்சனைகள் என்பவற்றை தீர்த்து கொடுப்பதில் முன்னிற்பதாகவும், மீராவோடை மூலம் கல்குடாவின் பாரளமன்ற அரசியல் தலைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அன்றும், இன்றும், நான் முன் நிற்கின்றவன் என கூறிய தவிசாளர்,கல்குடாவின் அரசியல் தலைமை வேறு பிரதேசத்தினால் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் என்றும் நான் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையில் நான் பள்ளிவாயலின் செயலாளராக இருந்த போது மீராவோடையில் உதுமான் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதனோடு 30 இலட்சம் பெறுமதியான காணியை முன்னால் அமைச்சர் அமீர் அலி அவர்களின் உதவியினால் பெற்று அதற்கான மூன்று மாடி கட்டடத்தையும் அவரின் உதவியினால் உதுமான் பாடசாலைக்கு அமைத்துக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மீராவோடையில் அமீர் அலி வித்தியாலயத்தை அமைப்பதற்காக பள்ளிவாயல் காணியை தானே முன்னின்று பல சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்ததாகவும்,மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் உயர்தர வகுப்புக்கான விஞ்ஞான பிரிவு ஆரம்பிப்பதற்கு அனைத்து உதவிகளையும் தவிசாளர் என்ற வகையிலும், பள்ளிவாயல் தலைவர் என்ற வகையிலும் தான் செய்து கொடுத்துள்ளதாக கூறி பிரதேசத்துக்கு தவிசாளர் என்றடிப்படையில் அவரினால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகண்டுள்ள அபிவிருத்திகளை விபரித்தார்.
கடைசியாக இவ்வாறு தனக்கெதிராக ஆதாரமில்லமலும், உண்மைக்கு புறம்பானதுமாக சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சட்டுக்களானது வருகின்ற அமர்வில் நம்பிக்கையில்லா பிரேரணையாக சமர்பிக்கப்படுமாயின் அதனை எவ்வித தயக்கமும் இன்றி தான் எதிர் கொள்ள தயாரக உள்ளதாகவும்.
தான் பிரதிநித்துவப் படுத்துகின்ற கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்லப்படுமாயின் அதற்கும் முகம்கொடுக்க தயார் என்றும், கட்சியின் தலைமையான அமைச்சர் றிஸாட் பதுர்தீன் அவர்கள் நான் எப்படிப்பட்டவன் என்பதை நன்கறிந்தவர்கள் என்றும், என்மேல் எப்போதும் விசுவாசமாகவும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அமைச்சர் அவர்கள் இருக்கின்றார் என தெரிவித்த தவிசாளர், கட்சியும், தலைமையும் எடுக்கின்ற முடிவுக்கு தான் கட்டுப்படுபவனாகவே இருப்பேன் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த அடிப்படையில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு மேலாக தற்போது மக்கள் தன்னுடன் இருப்பதாகவும், இவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சட்டுக்களுக்கு எனது நியாயங்களும், காலமும் பதில் சொல்லும் என்பதை தான் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பொறுப்பிலே கொடுத்தவனாக அவன் போதுமானவன் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறான பிரச்சனைகள் சபையில் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டு அதிக வருமானம் ஈட்டிக்கொள்ளும் ஓட்டமாவடி பிரதேச சபையானது அதனை நம்பி வாழுகின்ற மக்களுக்கு அதிக பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பது பிரதேச மக்களின் கருத்தாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க இடமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
நேர்காணல்:- இம்போட் மிரர் செய்தியாளர் ஓட்டமாவடி, அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment