பதுளை ' ஜங்சன்ஹோட்டல்' மீது காடையர்கள் தாக்குதல்- படங்கள்



 எமது செய்தியாளர்- 

துளை ' ஜங்சன்ஹோட்டல்' என்றழைக்கப்படும் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம்தாக்கப்பட்டுள்ளது. பதுளை மணிக்கோட்டு கோபுரத்திற்கு முன்னால் அமைந்துள்ள இவ்வியாபார நிலையம் இரவு நேரத்திலும் திறக்கப்படுகின்ற தொரு வியாபார நிலையமாகும். இன்று விடியற்காலை இரண்டரை மணியளவில் பொதுபல சேனா ஆதரவாளர் ஒருவரான 'பொடிமல்லி'  என்று அறியப்படும்ஒருவர்உற்பட இன்னும் இருவர் இக்கடைக்கு வந்துள்ளனர். கடைக்குள் வரும்போதே கூச்சலிட்டு கூக்குரலிட்டு வந்த இவர்கள் ' மேக அபே ரட்டஇ உம்பல இண்ட ஓன அபி கியன விதிஹட்ட. நெத்தம்மேவா ஒக்கோம குடு கரணவா. 

'(இது எங்கள்நாடு . நீங்கள்இங்கு இருப்பதென்றால்நாங்கள்சொல்லும்படி தான்இருக்க வேண்டும் .  இல்லாவிட்டால்இவற்றை எல்லாம்தவிடு பொடியாக்கி விடுவோம்.) என்று சத்தம்போட்டுள்ளனர். 

அத்துடன்கடனுக்கு டெலிபோன்கார்ட் ' (முட்கொடுப்பனவு அலைபேசி அட்டை)' மூன்று தருமாறுகேட்டுள்ளனர். கடனுக்கு தர முடியாது என்று மறுத்த போது முன்னால்வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அலுமாரியை தூக்கி கடையில்வேலைசெய்து கொண்டிருந்த முஹம்மத் என்பவர் மீது எறிந்துள்ளனர். அதை கையால்தடுத்தபோது அவருக்கு காயம்ஏற்பட்டுள்ளது. 

பிறகு வெறிபிடித்தவர்கள் போல்கடையில் உள்ள கண்ணாடி அலுமாரிகள் உற்பட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கடைக்கு சுமார் இரண்டு இலட்ச ரூபாவுக்கு மேல்சேதம் ஏற்பட்டுள்ளது. 

பதுளை போலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்ப கட்ட விசாரணை நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளனர். இச்செய்தி எழுதப்படும்வரை இன்னும் குற்றவாளிகள்கைது செய்யப் படவில்லை. மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஏ எம் எம் முசம்மில் மற்றும் உறுப்பினர்கள்ஸ்தலத்திற்கு விஜயம்செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :