புழுத்து நாறும் இந்த அரசமைப்பிற்கு தீர்வு என்ன? தீர்வு தரும் மொஹிடீன் பாவா

தவறாமல். எல்லோரும் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன்.

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்

ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே

அதிகாரமற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் அளவில் ஒரு செல்வாக்கு போய்விடக் கூடாது என்பதற்கே சில தொகுதி வாரி நிதி ஒதுக்கீடுகள். இது ஒரு நாடகம். பிறகு உங்கள் ஓட்டுப்போடும் புனிதக் கடமையின் பலன்தான் என்ன?

அது மட்டுமா மக்களால் தெரிவு செய் யப்பட்டு மக்களால் நியமனம் பெற்ற அங்கத்தவர்கள் அரசியல் வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவும் போது மக்களிடம் ஏதும் அனுமதி பெற்றார்களா ? உயர் பீட முடிவு என்றால் ஏன் மக்கள் வாய் பொத்தி நிற்கிறார்கள்?

சாலைகள் அகலமாகியிருக்கின்றன ,நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன?, இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம்.

மேற்சொன்ன உண்மைகளை விவாதிக்கும் எல்லா தருனங்களிலும் நாம் எதிர்கொள்ளும் கேள்வி, இந்த அரசமைப்பு பிரயோஜனமற்றது என்றால் வேறு மாற்றுதான் என்ன?

மாற்று வழி:

தவறாமல். எல்லோரும் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :