பலஸ்தீனத்திடம் இருந்து கைப்பற்றபட்ட ஜெருசலேமிலுள்ள புனிதப் பகுதிக்கு செல்வதற்கு ஆண்களுக்கு விதிக்கப்பட்ட வயதெல்லை கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் பதற்றம் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக நகரில் மேலதிக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஜோர்தானுடன் ஓமானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

0 comments :
Post a Comment