முஜாஹித், சஜீத்-
நுஸ்ரத் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டுக்கான விடுகை விழா பாடசாலை முன்றலில் பாடசாலையின் அதிபர் கு. முகம்மது பர்வின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் கல்விக்கு சிறப்பான அத்திவாரமிடும் இப்பாலர் பாடசாலைக்கு தன்னாலான உதவிகளை செய்து தருவேன் அதுமட்டுமன்றி இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்ற போதே மாணவர்கள் ஒரு சிறந்த பிரஜையாக நம் சமூகத்திற்கு வருவார்கள் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.ஜஃபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அவர்களின் திறமைகளும்; வெளிக்கொணரப்பட்டன அத்துடன் மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுகளும்; வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கிய ஆசிரியைக்கு மாணவர்களின் பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது
இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சைபுடீன் கிழக்கு மாகாண பாலர் பாடசாலையின் அம்பாரை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் இப்றாகிம் , சம்மாந்துறை பிரதேச உதவி ஆசிரிய ஆலோசகர் நஜாஸ் , மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment